Posts

Showing posts from August, 2017

17.கடல் பயணங்கள்

கடல் பயணங்கள் நான் விரும்பிப் படிக்கும் இணைய தளங்களில் ஒன்று.இல்லாமல் பயணம் செய்வது பற்றிய பதிவு இதோ : http://www.kadalpayanangal.com/2017/08/blog-post_89.html#c7077689560575943333. அதற்கு நான் இட்ட பின்னூடடம் இதோ : நான் 2005-2006 ல் கர்நாடகா -குஜராத்தை GPS உதவி இல்லாமல் சுத்தி வந்தேன் அது நல்ல ஒரு அனுபவம்.அப்பொழுது எனக்கு தமிழ் மட்டுமே தெரியும்,ஆங்கிலம் அரைகுறையாக தெரியும் அதை வைத்துக்கொண்டே சென்னை-பெங்களூரு-கார்வார்(கோவா எல்லை கர்நாடகா) -கூப்ளி-வாடி(ஹைதராபாத் கர்நாடகா) என்று சுற்றி வந்தேன் நல்ல ஒரு அனுபவம்.

16.கவிஞர் கமல்

கமல் இந்த கவிஞரும் என்று சொன்னதை சில எழுத்தாளர்கள் விமர்சித்திருக்கிறார்கள் .என்னதான் கமல் கோடிக்கணக்கில் ஊதியம் வாங்கும் நடிகராக இருந்தாலும் தன்னை ஒரு கவிஞராக கூறி பெருமைப்படுவது ஒட்டுமொத்த கவிஞர்களுக்கும் பெருமை. கவிஞர்களிலேயே பலர் சரியான ஊதியம் இல்லை என்று புலம்பி க்கொண்டிருக்கும் போது கமல் தன்னை கவிஞராக நினைத்து பெருமை கொள்வது கவிகள் தங்கள் செய்வது பெருமை வாய்ந்த தொழிலே என எண்ணி மகிழ்ச்சியடைய உதவும்.மேலும் இப்படி புலம்புபவர்கள் சோம்பேறிகள் என்பதே என் கருத்து.தமிழை வைத்து ஆட்சியைப் பிடித்தவர்கள்,திரைத்துறை எனும் தங்கசகதியில் மூழ்கித்திளைப்பைபவர்கள் இருக்கையில் இப்படி புலம்புபவர்கள் சோம்பேறிகளே .நானும் கமல் எழுதிய அல் அக்சா கோவில் பற்றிய கவிதையைப்படித்தேன் நன்றாக மற்றும் புரியும் படி இருந்தது.கவியாக கமலை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இல்லை.கமலை கவியாக ஏற்க மறுப்பவர்கள் அல் அக்சா பற்றிய கவிதையைப் படித்தபின் துவக்கநிலை கவியாகவாவது ஏற் றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

15.மதுரை -சிங்கப்பூர் வானூர்தி சேவை

மதுரை -சிங்கப்பூசிங்கப்பூர் வானூர்தி சேவை மதுரையில் கொண்டத்தை ஏற்படுத்தி உள்ளது.மதுரைகாரர்கள் நெடுநாளாக முயற்சி செய்து பெற்றிருக்கிறார்கள் வாழ்த்துக்கள் .இந்தியாவிலேயே முதன் முறையாக வானூர்தி நிலையத்துக்கென முகப்புத்தகத்தில் பக்கத்தை உருவாக்கி தொடர்ந்து முயற்சி செய்து மதுரை வானூர்தி நிலையத்தை பன்னாட்டு வானூர்தி நிலையமாக மாற்றி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள். வானூர்தி தொடர்பான தொழில்களுக்கு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் 12 ரூபாயாக திரும்ப வரும் என்று ஏர் ஏசியா உடமையாளர் டோனி பெர்னான்டஸ் சொன்னார்.அதே போல் மதுரை வானூர்தி நிலையத்திற்காக மதுரைகாரர்கள் செய்த அளப்பெரிய முயற்சிகள் ஒவ்வொன்றும் 12 ஆக பலன் தரும் .

14.பெட்ரா கெமிக்கல் மண்டலம் வரவேற்கிறேன்

பெட்ரா கெமிக்கல் மண்டலம் தமிழக அரசு பெட்ரா கெமிக்கல் மண்டபம் அறிவித்துள்ளதற்கு கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது .இது ஏற்கனேவே அறிவிக்கப்ப ட்ட திடடம் தான்.ஆனால் இதற்கு முன்பு அறிவித்த பொழுது எதிர்ப்பு வரவில்லை.இப்பொழுது எதிர்ப்பு வருகிறது அதற்கு கரணம் நீட் தேர்வு,ஜல்லிக்கட்டு தடை,நெற்களஞ்சியமான தஞ்சையில் எண்ணெய் கிணறுகளை தோண்டியதற்கு எதிர்ப்பு,ஏற்கனேவே பல்வேறு திட்ட்ங்களுக்கு கையகப் படுத்தப்பட்ட நிலங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்படாமை போன்றவையே,என் நினைவுப்படி இந்த திடடம் கருணாநிதி காலத்திலேயே (2006-2011) அறிவிக்கப் பட் ட திடடம்.செயலலிதாவும் எதிர்க்கவில்லை.அறிவித்ததோடு சரி அதன் பின் நடவடிக்கைகள்/தொடர்பான வேலைகள் எதுவும் நடைபெறவில்லை.தொழில் துறையினருடைய மாநாட்டு அறிவிப்புகளின் போது 2 லட்ச்சம் ,5 லட்ச்சம் கோடி என அறிவிக்கப் பட் டாலும்,சரியாக பின்தொடராததால் தான் ஒரு விழுக்காடு அளவு திட்ட்ங்கள் கூட நிறைவேற்ற படுவதில்லை.ஏற்கனேவே முடங்கி கிடந்த கோவை மெட்ரோ ரயில் திடத்தை அறிவித்தது போல இந்த திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.துறை முகம் மதுர வாயால் பறக்கும் சாலை திடடம் முட...

13.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-2

இப்படி தமிழ் நாட்டில் புதிய 10 மாவட்ட்ங்களை உருவாக்கிவிட்டு.அதன் பின்னர் மக்கள் தொகை மற்றும் கோரிக்கைகளை வைத்து ஒவ்வொரு ஆண்டும் 5-10 புதிய மாவட்ட்ங்களை உருவாக்க வேண்டும்.புதிய மாவட்ட்ங்களால் வேலை வாய்ப்பு கொடுவதோடு மட்டுமல்லாமல் அரசுக்கு வருமானமும் கிடைக்கும்.அதனால் தான்.தெலுங்கானாவில் புதிய மாவட்ட்ங்களுக்கான அறிவிப்புகள் வெளியி ட பட்டுள்ளன.புதிய மாவட்ட்ங்களை உருவாக்குவதால் புதிய வளர்ச்சியடைந்த நகரங்கள் கிடைக்கும்.நகரங்கள் தான் அரசுக்கு வருமானத்தை.அள்ளிக்கொடுப்பன என்பதை மறந்து விட வேண்டாம்.தெலுங்கானாவில் வருவாயை கூட்டுவதற்காக மாவட்ட்ங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தெலுங்கானாவின் மக்கள் தொகை 3.5 கோடி மட்டுமே. தமிழ் நாட்டின் மக்கள் தொகை 7.2 கோடி அப்படி பார்த்தால் 62 மாவட்ட்ங்கள் இருக்க வேண்டும்.ராமதாஸ் சொன்னதை விட 2 அதிகம்.இப்பொழுது விளங்குகிறதா ஏன் தெலுங்கானா முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் இடத்தில உள்ளது என்று எந்நேரமும் தெலுங்கானாவின் வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் முதல்வர் இருப்பதால் தான்.

12.சாதி பிரச்னை

இது எல்லா இடங்களிலும் உள்ளதுதான் ,தமிழ் நாட்டின் தர்மபுரியில் சாதி பிரச்னை உள்ளது .ஆனால் பெங்களூருக்கு வேலை தேடி செல்லும் தமிழர்கள் அனைவரும் கன்னடர் களுக்கு தமிழர்கள் தான்.காவிரி பிரச்னை வரும் பொது யாரும் அந்த சாதி காரனை அடித்தான்.இந்த சாதி காரனை அடித்தான் என்று சும்மா இருப்பதில்லை.எல்லாரும் இணைந்து தான் போராடுகிறார்கள்.காவிரி நீரால் பயன் பெறாத தென்மாவடத்தினர் கூட காவிரிக்காக போராடுகிறார்கள். 4 பேர் இருக்கும் வெட்டுக்குள்ளேயே அடிதடிகள் பிரச்சனைகள் இருக்கும் பொது 50 லட்ச்சம் தமிழர்கள் இருக்கும் ஈழ த் தமிழர்களுக்குள் பிரச்னை இருப்பதில் வியப்பில்லை.இதை களைய வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய வாதிகளுக்கு உள்ளது.ஈழம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது சாதி பிரச்னை இருக்கவில்லை.

11.விரும்பி படிக்கும் இணைய தளம்.

விரும்பி படிக்கும் இணைய தளம். கலையகம் நான் விரும்பி படிக்கும் இணைய தளங்களில் ஒன்று.இதில் ஈழத்து சாதி பிரச்சனை/தமிழர்களுக்கு இடையேயான வேறுபாடு பற்றி எழுதி இருக்கிறார் படியுங்கள். http://kalaiy.blogspot.qa/2017/07/blog-post_31.html

10.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-1

சமீபத்தில் ராமதாஸ் தமிழ்நாடடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்க வேண்டும் என் று சொன்னார்.என்னுடைய கருத்து படி ஒவ்வொரு 10 லட்ச்சம் மக்கள் தொகைக்கும் ஒரு மாவட்டம் வேண்டும்.அனல் உடனடியாக இப்படி செய்வது சரிப்பட்டு வராது.முதலில் உடனடியாக பிரிக்கப்பட வேண்டிய மாவட்ட்ங்கள் எவை ஏ ன பார்க்க வேண்டும். 1.வட சென்னை -சென்னை 2.திருப்பத்தூர் -வேலூர் 3.தென்காசி -நெல்லை 4.கள்ள க் குறிச்சி -விழுப்பு ரம் 5.எண்ணூர் -திருவள்ளூர் 6.செங்கல்பட்டு -காஞ்சிபுரம் 7.பொள்ளாச்சி -கோவை 8.பூம்புகார் -நாகை /தஞ்சை 9.விருத்தாச்சலம்/சிதம்பரம்-கட லூர் 10.மேட்டூர் -சேலம் இப்படி பிரித்தால் மொத்தம் 42 மாவட்டளை கொண்டதாக தமிழகம் இருக்கும்.இதில் திருப்பத்தூர்,தென்காசி, கள்ள க் குறிச்சி, விருத்தாச்சலம் தனி மாவட்ட கோரிக்கைகள் ஏற்கனேவே எழுப்ப பட்டுள்ளன .தென்காசியை தனி மாவடடம் ஆக்குவது குறித்து ஆராய ப் படும் என அமைச்சர் உதய குமார் கூறியிருந்தார் -(தொடரும்)

9.சோபா சக்தி:உலகத்தரம்,கெட்ட வார்த்தைகள்

சோபா சக்தியின் கதைகளில் கெட்ட வார்த்தைகள் ஆபாசங்கள் இருந்தாலும் அதையும் தண்டி உலகத்தரம் இருக்கிறது.பிரான்சில் இருபாதாலோ/போர் நடக்கும் ஈழத்தில் இருந்து வந்ததாலோ தெரியவில்லை.அப்படி ஒரு உலகத்தரம் விரவிக் கிடக்கிறது.உலக இலக்கியங்கள் மற்றும் திரைப்படங்கள் பெரும்பாலும் போர் தொடர்பானவை.உதாரணம் கிளாடியேட்டர்,டிராய்,அபகலிப்டோ திரைப்படங்களும்,கிரேக்க துன்பியல் காவியங்கள்,ராமாயணம்,மகாபாரதம்.சோபா சக்தி எழுதிய இந்த கதையில் ஆபாசம் இருந்தாலும் உலக தரத்துக்கும் பஞ்சமில்லை.மேலும் சிலர் நன் றாக எழுதுகிறார்கள் ஆனால் அவசியமில்லாமல் கெட்ட வார்த்தைகளைப் போட்டு கெடுத்து விடுகிறார்கள்.அவர்களுக்கு சுயத் தணிக்கை தேவை. கெட்ட வார்த்தைகள் ஆபாசம் கலந்த ஒரு உலகத்தரமமான கதை இதோ: http://www.shobasakthi.com/shobasakthi/?p=1201

8.கர்நாடகாவுக்கு மகராசுடிரம் கொடுத்த பதிலடியில் தமிழ் நாட்டின் 2-ஆம் இடம் போனது -2

தமிழ்நாட்டை மகராசுடிரம் வீழ்த்த காரணம் மும்பையை வைத்து தகவல் தொழில் நுட்பத்தில் ஓரளவுக்கு மேல் சாதிக்க முடியாது என்பதை மகராசுடிரம் புரிந்து கொண்டதே.அதன் பின்னர் அவர்கள் புனேவை தேர்ந்தெடுத்தார்கள்.மும்பை இந்தியாவின் பொருளதார தலைநகரம், மகராசுடிராவின் தலைநகரம்,பங்குச்சந்தை நகரம் என நிறைத்து போயிருந்ததே ஓரளவுக்கு மேல் சாதிக்க முடியாத கரணம் ஆகும்.மும்பையில் ஏற்கனேவே தொழில் மற்றும் வர்த்தக நிறுவன ங்களால் நிலத்தின் விலை ஏறிப்போயிருந்ததும் ஒரு கரணம்.எனவே புனேவுக்கு முக்கியத்துவம் கொடு க் கத்தொடங்கினார்கள் . புனே தகவல் தொழில் நுட்ப நகராக வளர துவங்கிய பொது அடுத்த தகவல் தொழில் நுட்ப நகர் எது என் ற பட்டி மன் றம் தொடங்கியது.அப்பொழுதும் சென்னைக்கே வாய்ப்பு புனேவுக்கு வாய்ப்பு குறைவு.புனேயில் வெற்றி கதைகள் குறைவு சென்னையில் வெற்றி கதைகள் அதிகம் என் று சொன்னார்கள்.இத்தனைக்கும் புனே ஊர்திகள் உற்பத்தி துறையில் ஓரளவு வெற்றி பெற்ற நகரமாகும்.அதன் பின்னர் நடந்தது தான் விந்தை.புனே வல்லுனர்களின் கணிப்பை முறியடித்து. ,சென்னையை 3-ஆம் இடத்துக்கு தள்ளி 2-ஆம் இடத்தை பிடித்தது தமிழ் நாடும் 3-ஆம் இடத்துக்கு தள்ள...

7.வியப்பு :

தகவல் தொழில் நுட்பத்தில் கர்நாடகாவுக்கு மகராசுடிரம் கொடுத்த பதிலடியில் தமிழ் நாட்டின் 2-ஆம் இடம் போச்சு தொடரை எழுதி கொண்டி ருந்த போது,தமிழ் நாட்டின் 2-ஆம் இடம் காலி என் றே எழுத நினைத்தேன்.முடிந்தவரை தமிழில் எழுத வேண்டும் என்ற முடிவுடன் வந்ததால் யோசித்து போச்சுவை கண்டுபிடித்தேன். தமிழ் நாட்டை முந்தியத்தில் தான் வியப்பு என்பதற்கு முதலில் ஆச்சரியம் என் று எழுதலாமா ஆச்சர்யம் என் று எழுதலாமா என் று நினைக்கும் போது பொருத்தமான தமிழ் வார்த்தை வேறு இல்லை என்றே நினை த்தேன்.ஆடுத்த கணமே வியப்பு நினைவுக்கு வந்தது.பள்ளியில் பன்னிரு ஆண்டுகள் தமிழ் படித்தது வீண் போகவில்லை.

6.இன்றய வாசிப்பு

சோபா சக்தி தனக்கே உரிய அதிர்ச்சி ஊட்டும் தன்மை,அங்கத சுவையுடன் இந்த கதையை எழுதியுள்ளார்.இணைப்பு இதோ: http://www.shobasakthi.com/shobasakthi/?p=1317 சோபா சக்தி தன் படைப்புகளை யார் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம் என்று அறிவித்து இருப்பதால் முழுக்கதையும் இதோ: ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம். எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கதை திடீரெனத் தொடங்குகின்றது. யாழ்ப்பாணப் பட்டினத்திலிருந்து மண்கும்பான் கிராமம் நான்கு கட்டைகள் தொலைவிலிருக்கிறது. அங்கேதான் தீவுப் பகுத...

5.தகவல் தொழில் நுட்பத்தில் கர்நாடகாவுக்கு மகராசுடிரம் கொடுத்த பதிலடியில் தமிழ் நாட்டின் 2-ஆம் இடம் போனது -1

தகவல் தொழில்நுட் ப் பதில் தமிழ் நாடு கர்நாடகாவை அடுத்து 2-ஆம் இடத்திலே இருந்து வந்தது.விரைவில் கர்நாடகத்தை முந்தும் என்றும் 2004-2005 ல் சொன்னார் கள்.அதற்கு கரணம் பெங்களூருவை விட சென்னை சிறந்த சாலை கட்டமைப்புகளை கொண்டது என்றும் கூறினார்கள்.ஆனல் 2010 வாக்கில் மகராசுடிரம் தமிழ் நாட்டை முந்தி இரண்டாம் இடத்தை பிடித்தது.அதற்கு முன்பு அவர்கள் 4-ஆம் இடத்திலே இருந்தார்கள்.அந்திராவில் தனிமாநில கோரிக்கைகள் ,குழப்பங்கள் இருந்ததால் ஆந்திராவை முந்தியத்தில் வியப்பு இல்லை.ஆனல் நல்ல நிலையில் இருந்த தமிழ் நாட்டை முந்தியத்தில் தான் வியப்பு.இத்தனைக்கும் தமிழ் நாட்டில் முதல் தகவல் தொழில் நுட்ப பூங்காவை திறந்து வைத்த,தொழில் துறைக்கு ஓரளவுக்கு முதன்மை கொடுக்க கூடிய திமுக ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது.அப்படியிருந்தும் தமிழ்நாட்டை மகராசுடிரம் வீழ்த்த காரணம் மும்பையை வைத்து தகவல் தொழில் நுட்பத்தில் ஓரளவுக்கு மேல் சாதிக்க முடியாது என்பதை மகராசுடிரம் புரிந்து கொண்டதே.அதன் பின்னர் அவர்கள் புனேவை தேர்ந்தெடுத்தார்கள்.மும்பை இந்தியாவின் பொருளதார தலைநகரம், மகராசுடிராவின் தலைநகரம்,பங்குச்சந்தை நகரம் என...

4.கோவையின் அசுர தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி

கோவையின் தகவல் தொழில் நுட்ப உற்பத்தி 2010 ல் சுமார் 700 -1000 கோடியிலிருந்து 2016-17 ல் 15000 கோடி வரை வளர்ந்துள்ளது .வேறு எந்த நகரமும் இந்த அளவு வளர்ச்சியை பெறவில்லை .தமிழக அரசு ஒத்துழைத்தால் கோவை மேலும் வளர்ச்சி பெறுவதோடு,தமிழகம் மகாரசூடிரத்திடம் இழந்த இரண்டாமிடத்தை மீண்டும் பெறமுடியும்.

3.கேரளாவின் ஒரே பெரு (மெட்ரோ) நகரம் கோயம்புத்தூர்

 ஒரு மலையளியிடம் பேசிக் கொண்டிருந்த போது கேரளாவின் ஒரே பெரு (மெட்ரோ)  நகரம் கோயம்புத்தூர்ன்என்று சொன்னான்.ஆனால் கொச்சியில் மெட்ரோ ரயில் வந்துவிட்ட்து,கொச்சி தான் கொச்சி தான் இந்தியாவின் 7 பெரிய விமான நிலையம்.80 லட்ச்ம்  பயணிகளை கையாளுகிறது .கோயம்புத்தூர் 20 லட்ச்சம் பயணிகளை மட்டுமே கையாளுகிறது.என்பது அவனுக்கு தெரியாது என்பது நன்றாக புரிந்தது.ஒருகாலத்தில் தென்னிந்தியாவின் 4 வது பெருநகராக இருந்த கோவை தமிழக அரசின் சென்னையை மட்டும் நோக்கும் கொள்கையினால் கொச்சியிடம் 4 ஆம் இடத்தை இழக்க போவதோடு விசாகப்பட்டினம்,விஜயவாடா போன்ற நகரங்கள் கூட கோவையை வீழ்த்துவதற்கான வாய்ப்பு அதிகம் .விஜயவாடா சந்திரபாபுவின் தலைநகர திட்ட்ங்களால் கோவையை முந்தி சென்னை கைதராபாத்துக்கு இணையாக வரப்போவது உறுதி.விசாகப்பட்டினத்துக்கும் மேரோ ரயில் மற்றும் சென்னை - விசாகப்பட்டின தொழில்தட அறிவிப்பு ,சென்னை - விசாகப்பட்டின புல்லட் ரயில் அறிவிப்புகள் ஆகியன மூலம் வளர்ச்சி விதைகள் தூவப்பட்டு விட்டன.கோவையை கொஞ்சம் காப்பாற்றி வைத்திருப்பது திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரைபட்ட தகவல் தொழில் நுட்ப பூங்கா தான்.தொடக்கத்...

2.முதல்வர் பழனிச் சாமிக்கு பாராட்டுக்கள்

2.முதல்வர் பழனிச் சாமிக்கு பாராட்டுக்கள்.கோவை மெட்ரோ ரயில் மற்றும்,சென்னை மோனோ  ரயில் திட்டங்களை         அறிவித்ததற்காக.போக்குவரத்துதான் நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது.பிரபலம் இல்லாத முதல்வர்   என்று கருதப் படும் பழனி ச் சாமி.இந்த திட்ட்ங்களை நிறைவேற்றினால் காமராஜருக்கு அடுத்த பிரபலமான முதல்வராக உருவெட்டுப்பார் .ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் பொது திருச்சியிலும் மெட்ரோ ரயில் ஓடும் என்று சொன்னார்.அனல் மத்திய அரசின் உத்தரவுப்படி 10 லட்ச்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மெட்ரோ ரயில் வசதியை பெற முடியும்.அதன் படி பார்த்தால் மதுரை,திருச்சி,சேலம்,திருப்பூர் கூட மெட்ரோ  ரயில் வசதியை பெற முடியும்.அப்படி செய்தல்  முதல்வர் பழனிச் சாமி தமிழ் நாட்டின் சிற்பியாக புகழ் பெற முடியும்.3 மெட்ரோ ரயில் கள் கொங்கு மண்டலத்தில் இருப்பதால் முதல்வர் பழனிச் சாமி கொங்கு மண்டலத்தை தன்னுடைய பிடிக்குள் கொண்டு வர முடியும்.சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம்,மதுரை,திருச்சி,சேலம்,திருப்பூர் மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்புகள்,கோவை மெட்ரோ ர...

1.வணக்கம்

வணக்கம், தமிழ் நாட்டை யூரோப்பிய,அமெரிக்கா நாடுகளைப் போல வளர்ந்த நாடாக  மாற்றுவதுதான் இந்த வலை ப் பூவின் நோக்கம்.