Posts

Showing posts from October, 2017

27.ஊதிய உயர்வு பற்றிய செய்தி மற்றும் கருத்துகள்

சிறந்த கருத்து -1 சம்பளத்தை உயர்த்துவதற்கு பதிலாக வேலை வாய்ப்பை அதிகரித்து இருக்கலாம். அரசாங்க வேலைகள் இன்னும் சீக்கிரமாகவும் சிறப்பவும் முடியும். ஒரு அறுபது ஆயிரத்தை இரண்டு முப்பது ஆயிரமா பிரிச்சி கொடுத்து இருந்தா ரெண்டு குடும்பம் பிழைக்கும். சிறந்த கருத்து -2 பொருளாதார அறிவே இல்லாதவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான். இந்த சம்பள உயர்வு இனிமேல் மாற்றவே முடியாது. மக்களுக்கு தேவையானவற்றை எந்த பணத்தில் இருந்து செய்வார்கள். அரசு ஊழியர்களின் ஓட்டு முழுமையாக கிடைத்து விடும் என்று செய்தார்களோ? சிறந்த கருத்து -3 தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே தத்தளிக்கிறது. எப்படி அவர்கள் சம்பள உயர்வு அளிக்க முடியும். அந்த ஊழியர்கள் எப்படி விலைவாசியை எதிர்கொள்ள முடியும்? தமிழ் நாட்டு விவசாயிகள் டெல்லி போராட்டம் செய்தது அப்போது முதல்வர்க்கு கண்ணு தொியாலா. அரசு பள்ளி மாணவா/ மாணவிகள் போராட்டம் செய்தது கண்ணுக்கு தெரியாலா. நீட் எதிராக போராட்டம் அதுவும் தெரியாது.ஆனால் அரசு ஊழியர்கள் போராட்டத்தற்க்கு உடனடியாக தீர்வு என்ன கோடுமை இது. 1. டெல்லியில் வரை போராட்டம் நடத்தியாவா்கள் விவசாயிகள் நாங்கள் என்ன பைத...

26.அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு

அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு அறிவிப்பு வந்துள்ளது.இடைநிலை ஆசிரியர்களின் சம்பளம் 40000 லிருந்து 50000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அரசு பள்ளிகள் தரம் கெட்டவை என்று சொல்லி நா டிச்ச செல்லும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியும் வெறும் 5-8 ஆயிரங்களே.இத்தனைக்கும் அரசு பணியிடங்கள் பெருமளவில் காலியாக உள்ளன.அவை பெருமளவில் நிரப்பப் படாமல் உள்ளன.நம் நாட்டில் மக்கள் தொகையே அரசு அலுவலகங்கள்,பேருந்துகளில் கூட்டம அதிகமாக இருப்பதற்கு கரணம் என்று கூறப்படடாலும் அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை குறைவு,பேருந்துகள் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கப் படமாய் போன்றவையே பிரச்சனைகளுக்கு காரணமாகும்.தமிழ்நாட்டை விட 2 கோடி மக்கள் தொகை குறைவான இங்கிலாந்தில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 60 லட்ச்சம்,தமிழ் நாட்டின் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 12 லட்ச்சம் மட்டுமே.அரசு ஊளியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அரசு பணிகள் எவ்வளவு தாமதமாக நடைபெறும் ,பொது மக்கள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை அறிகிறீர்களா?இத்தனைக்கும் 1991 லிருந்தே அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 12 லட்ச்சமாக இருந்து வருகிறது.1...