Posts

Showing posts from September, 2017

25.கொஞ்சம் அரசியல்

ஒரு ஆந்திர விடுதி நண்பர் பலமுறை தமிழர்கள் அரசியல் பற்றி பேசுவார்கள் இல்லை திரைப்படம் பற்றி பேசுவார்கள் என்று சொன்னார்.எனக்கும் வளர்ச்சி,நிர்வாகம் பற்றி பேசி களைப்பாகிவிட்டது.கொஞ்சம் அரசியல் பேசலாம். ஸ்டாலின் உலக வரலாற்றிலேயே அதிகம் காலம் காத்திருப்பவர் என்று சொல்லி தமிழ் நாட்டில் சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள் எல்லாம் கவலைப்படுவது வியப்பாக உள்ளது.2001-06 சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்த துரைமுருகன் இப்பொழுதும் எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருப்பது பற்றியோ,அப்பொழுது எந்த பதவியும் இல்லாமல் வெறும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருப்பது பற்றியோ யாரும் கவலைப் படுவதில்லை.2001-06 சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த அன்பழகனுக்கு முதல்வர் பதவி வழங்கப்படாமல் கருணாநிதிக்கு வழங்கப் பட்டது பற்றியோ ,அவருக்கு துணை முதல்வர் கூட பதவி வழங்கப்படாமல் அவர் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கீழே பணிபுரிந்த்தது பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை .ஆனால் ஸ்டாலின் எதோ முதல்வர் பதவிக்காகவே பிறந்ததுபோல் அறியாமைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.இதில் படித்தவர்கள் ,அறிஞ்ர்கள் எண்ண...

24.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-3

இந்த சுதந்திர நாள் விழாவின் பொது விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி அல்லது வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூரை தனியாகப் பிரித்து அறிவிப்பு வெளியிட முதல்வர் பழனிசாமி திட்டமிட்டிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.இரண்டு மாவட்ட்ங்களுமே நெடுநாளைய கோரிக்கையாகும் .வேலூர் ,விழுப்புரம் இரண்டுமே தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் ஆகும் .வேலூரின் பரப்பளவு 6077 சதுர கி.மீ ,மக்கள் தொகை 3936000(2011-ல் ), விழுப்புரத்தின் பரப்பளவு 7217 சதுர கி.மீ ,மக்கள் தொகை 3459000(2011-ல் ).தமிழ் நாட்டின் மிக சிறிய மாவட்ட்ங்களான சென்னை,கன்னியாகுமாரி ஆகியவற்றின் பரப்பளவு முறையே 178சதுர கி.மீ ,1672 சதுர கி.மீ.அப்படிப் பார்த்தல் கன்னியாகுமரியை விட வேலூர் 4 மடங்கும்,விழுப்புரம் 5 மடங்கும் பெரியவை.சிறிய மாவட்டம் என்று அழைக்கப்படும் கன்னியாகுமரியில் கூட களியாக்கவிளையிலிருந்து தலைநகர் நாகர்கோவிலை அடைய ஒன்றரை மணி நேரம் ஆகிறது.அப்படி பார்த்தால் கன்னியாகுமரியை விட 4,5 மடங்கு பெரிய மாவட்டங்களின் தலை நகரையடைய எவ்வளவு மணிநேரம் ஆகும்,அதனால் மக்கள் அடைய நேரும் துன்பங்கள் என்னவெல்லாம் என்று நினைத்து...

23.வட கொரியா

நமக்கு தான் வெட்ட ,வெட்ட எதிரிகள் முளைத்து வருகிறார்கள் என்று பார்த்தால் வல்லரசு அமெரிக்காவுக்கே சதாம் ,ஒசாமா ,தாலிபானைகளை முடித்து விட்டு வரும் முன்னே வட கொரியா என்று ஒரு வம்பன் எதிரி முளைத்து வந்திருக்கிறான் ,முதலில் தென் கொரியா ,ஜப்பான் நாடுகளுக்கு மட்டுமே ஆபத்தாக பார்க்கப்பட்ட வட கொரியாவின் ஏவுகணை வரம்புகள் இன்று அமெரிக்கா வரை நீண்டு உலக வல்லரசு அமெரிக்காவுக்கே பெருந்தலைவலியாக மாறியிருக்கிறது.சுண்டக்காய் வட கொரியாவின் அலம்பல்கள் ரசியாவை இரண்டாம் உலக காலத்து பழைய கதைத்தலைவர்களான ஜெர்மனி,இங்கிலாந்து ,பிரான்ஸ் நிலைமைக்கு தள்ளியிருக்கிறது.வெகு விரைவில் ரசியாவும் பனிப்போர் காலத்து பழைய கதைத்தலைவன் என்று அழைக்கப்படடால் வியப்பில்லை .வருங்கால வல்லரசு என்று மார்தட்டிக்கொண்ட சீனாவும் அமெரிக்கா -வடகொரியா என்று கதை மாறிக்கொண்டதால் பல்கலைக் கடித்துக்கொண்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.எப்படியோ நமக்கு மட்டுமல்ல வலிமை வாய்ந்த அமெரிக்காவுக்கே பிரச்சனைகள் இருக்கின்றன என்று நிம்மதிப் பட்டுக்கொள்ளலாம்.

22.அரசு மது பானக் கூடங்கள்-2(படகு துறை)

2-3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசின் படகு துறை 48 படகு நிலையங்களின் மூலம் ஆண்டுக்கு 11 கோடி வருமானம் வருவதாக செய்தி வெளியிட்டிருந்தது.தமிழ் நாட்டில் உள்ள நீர் நிலைகளின் எண்ணிக்கை 1000 கிலோ மீற்றர் நீள கடற்கரை ஆகியவற்றை ஒப்பிடும் போது 48 படகு துறை என்பது மிகக்குறைவே ஆகும்.இந்த படகு துறைகளின் எண்ணிக்கையை ஆண்டு தோறும் இருமடங்காக்கினாலே 10 ஆண்டுகளில் சுமார் 50000 ஆயிரம் படகு துறைகளுடன் 11000 கோடி வருமானம் கொடுப்பனவாகவும் மாறிவிடும்.மேலும் இந்த இடங்களில் போக்குவரத்து வசதி,தாங்கும் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து மறைமுகமாக பல வேலைவாய்ப்புகள் மற்றும் வருவாயை அரசுக்கு கொடுக்கும்.கன்னியாகுமரியில் மக்கள் வருவது விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கோ ,திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கோ அல்ல.கடற்கரை ,படகு சவாரி,அதையொட்டி உள்ள பொழுதுப்போக்கு மையங்கள் போன்றவற்றை காண்பதற்கே.ஓணம் பண்டிகையின் போது கன்னியாகுமரியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 14000 லிருந்து 21000 ஆயிரமாக உயர்ந்து விடுகிறது.மலையாளிகள் வருவது விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கோ ,திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கோ அல்ல,சுற்றுலா மற்றும் பொழுது போக்கிற...

21.மெட்ரோ ரயில்-2

மத்திய அரசின் அறிவிப்புப்படி 10 லட்ச்சம் மக்கள் தொகைக்கு மேல் கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திடடடத்தை அறிவிக்க முடியும் .அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் சென்னை ,மதுரை ,கோவை ,திருச்சி ,சேலம் ,திருப்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை யை அறிமுகப்படுத்த முடியும் .ஏற்கனேவே சென்னையில் மெட்ரோ ரயில்,புறநகர் ரயில் ஆகியவை உள்ளது .கோவை,மதுரை,திருச்சி ஆகிய நகர்களில் மோனோ ரயில் திட் டம் செயலலிதாவால் அறிவிக்கப்பட்டும் செயல் படுத்தப்படவில்லை.ஸ்டாலின் திருச்சியில் மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்தலின் பொது சொன்னார்.ஆனால் திமுக வெற்றி பெறமுடியவில்லை அதிமுக ஆட்சிக்கு வந்த பொது கோவைக்கு மட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆனால் இப்போது ஆட்சியே இழுபறியாகிவிட்டது.என்னதான் கோவை அதிமுக கோடடையாக இருந்தாலும் .திமுக ஆட்சி காலத்தில் தான் கோவையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கொண்டுவரப்பட்டது.அது போல மெட்ரோ ரயிலும் திமுக ஆட்சியில் தன கொண்டு வரப்படுமோ என்னவோ?

20.மகராசுடிராவுக்கு கோவையை வைத்து தமிழகம் கொடுத்த பதிலடி

2009 ல் மகராசுடிராவிடம் 2 ஆம் இடத்தை இழந்தபின் 2015 ல் தமிழ்நாடு மீண்டும் 2-ஆம் இடத்தை பிடித்திருக்கிறது .இதற்கு கரணம் கோவையை தகவல் தொழில்நுட்ப நகராக வளர்ச்சியடைய செய்ததே காரணமாகும்.கோவையில் 2010 ல் 350 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்படட பிறகு 5 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு மகராசுடிராவை முந்தியிருக்கிறது.2016-17 ல் தமிழ்நாடு -மகராசுடிரா இடையேயான வித்தியாசம் 10-15 ஆயிரம் கோடிகளே இதில் கோவையிலிருந்து மட்டும் 15 ஆயிரம் கோடி தொழில்நுட்ப உற்பத்தி வந்ததே தமிழ்நாடு மகராசுடிரத்தை முந்தக் காரணம்.இதில் ஒரு சுவாரசியமாக 2010 ல் திமுக ஆட்சியில் 2-ஆம் இடத்தை மகராசுடிரத்திடம் இழந்த தமிழ்நாடு 2015 அதிமுக ஆட்சியில் மீண்டும் 2-ஆம் இடத்தை பிடித்திருக்கிறது.அனாலும் 2 -ஆம் இடத்தை பிடிக்க கரணம் அதிமுக ஆட்சி இல்லை .திமுக ஆட்சியின் (2006-11) இறுதிக்காலத்தில் 2010 ல் துவக்கப்படட கோவை தகவல் தொழில்நுட்ப பூங்காவே காரணமாகும்.அது 5 ஆண்டுகள் கழித்து 2015 அதிமுக ஆட்சியில் தமிழகம் மகராசுடிரத்தை முந்தக் காரணமாயிருக்கிறது.தொடக்கத்தில் தோலிவித் திடடம் என்று கூப்பாடு போடடக் கோவைக்காரர்கள் இப்பொழுத...

19.அரசு மது பானக் கூடங்கள்-1

தமிழக அரசு மது பானக் கூடங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையால் வருவாயை இழந்து திணறி வருவது அனைவருக்கும் தெரியும் .எதோ இந்த மது பானக் கூடங்கள் மூலம் வரும் வருவாய் தமிழ்நாடு பிறந்ததிலிருந்து வருவது போல் எல்லாரும் நினைத்து இருக்கிறார்கள்.ஆனால் 2001 ல் செயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னரே தனியார் வசம் இருந்த மது பானக் கடைகள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் ஏமாத்தப் பட்டு கடை முதலாளிகளுக்கு செல்வதைக்கண்டு மது பானக் கூடங்களை அரசுடைமையாக்கினார் .அதன் பின்னர் ஆண்டுதோறும் மதுபானக் கடைகள் விற்பனையில் கண்ட வளர்ச்சி வரலாறு.தமிழ் நாட்டில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனகளை விட வளர்ச்சி அதிகம் இருந்தது என்றாலும்.எதோ ஒட்டுமொத்த தமிழ் நாடும் இந்த மது பானக்கூடங்களை நம்பித்தான் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப் பட்டது.தமிழக அரசின் 1 லட்ச்சம் கோடி வரவு செலவு அறிக்கையில் இந்த சுமார் 30 ஆயிரம் கோடி மதுபான விற்பனையில் மதுபான நிறுவனகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை கடை வாடகை ஊழியர்களின் ஊதியம் போக சுமார் 10000 கோடியே அரசுக்கு வருவாயாக வந்திருக்கும்.இது வரவு செலவு அறிவிப்பில் வெறும் பத்து விழுக்காடு மட்டுமே மீதி 90 ...

18.மெட்ரோ ரயில் திட்டங்கள் -1

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை போக்குவரத்து உள்கட்டமைப்பே ஆகும்.இன்றைக்கு வளர்ந்த நாடுகள் என் வளர்த்த நடுகள் ஏன் வளர்ந்த நாடுகளாக இருக்கின்றன என்று பார்த்தால் அவை கொண்டிருக்கும் சாலைகள் மெட்ரோ ரயில் திட்ட்ங்கள்,வானுர்தி நிலையங்களே காரணங்கள் ஆகும்.உதாரணத்துக்கு ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை விமான நிலையம் 1.8 கோடி பயணிகளை கையாள்கிறது.ஆனால் யூரோப்பாவிலுள்ள 10-20 லட்ச்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களே 4-5 கோடி பயணிகளை கையாள்கிறது.யூரோப்பா ,அமெரிக்காவை பின்பற்றும் சென்னையை விட 5 மடங்கு குறைவாக 20 லட்ச்சம் மக்கள் தொகை கொண்ட துபாய் கூட சுமார் 7.5 கோடி பயணிகளை கையாள்கிறது.கோவை அளவுக்கு மக்கள் தொகை கொண்ட துபாயில் 10 ஆண்டுகளுக்கு முன்பே மெட்ரோ ரயில் வந்துவிட்ட்து.கோவையில் 10 ஆண்டுகளாக மெட்ரோ /மோனோ ரயில் திட்டங்கள் அறிவிப்பு நிலையிலேயே நிற்கிறது.கடைசியாக மத்திய அமைச்சர் ஒருவர் கோவையில் மெட்ரோ ரயில் தொடங்குவது முடியவே முடியாத காரணம் என்று கூறியதோடு மட்டுமில்லாமல் யூரோப்பாவில் 5 லட்ச்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கூட மெட்ரோ ரயில் செயல் படுகிறது என்று கூறியிருப்பது நகைப்பு...