5.தகவல் தொழில் நுட்பத்தில் கர்நாடகாவுக்கு மகராசுடிரம் கொடுத்த பதிலடியில் தமிழ் நாட்டின் 2-ஆம் இடம் போனது -1

தகவல் தொழில்நுட் ப் பதில் தமிழ் நாடு கர்நாடகாவை அடுத்து 2-ஆம் இடத்திலே இருந்து வந்தது.விரைவில் கர்நாடகத்தை முந்தும் என்றும் 2004-2005 ல் சொன்னார் கள்.அதற்கு கரணம் பெங்களூருவை விட சென்னை சிறந்த சாலை கட்டமைப்புகளை கொண்டது என்றும் கூறினார்கள்.ஆனல் 2010 வாக்கில் மகராசுடிரம் தமிழ் நாட்டை முந்தி இரண்டாம் இடத்தை பிடித்தது.அதற்கு முன்பு அவர்கள் 4-ஆம் இடத்திலே இருந்தார்கள்.அந்திராவில் தனிமாநில கோரிக்கைகள் ,குழப்பங்கள் இருந்ததால் ஆந்திராவை முந்தியத்தில் வியப்பு இல்லை.ஆனல் நல்ல நிலையில் இருந்த தமிழ் நாட்டை முந்தியத்தில் தான் வியப்பு.இத்தனைக்கும் தமிழ் நாட்டில் முதல் தகவல் தொழில் நுட்ப பூங்காவை திறந்து வைத்த,தொழில் துறைக்கு ஓரளவுக்கு முதன்மை கொடுக்க கூடிய திமுக ஆட்சி தான் நடந்து கொண்டிருந்தது.அப்படியிருந்தும் தமிழ்நாட்டை மகராசுடிரம் வீழ்த்த காரணம் மும்பையை வைத்து தகவல் தொழில் நுட்பத்தில் ஓரளவுக்கு மேல் சாதிக்க முடியாது என்பதை மகராசுடிரம் புரிந்து கொண்டதே.அதன் பின்னர் அவர்கள் புனேவை தேர்ந்தெடுத்தார்கள்.மும்பை இந்தியாவின் பொருளதார தலைநகரம், மகராசுடிராவின் தலைநகரம்,பங்குச்சந்தை நகரம் என நிறைத்து போயிருந்ததே ஓரளவுக்கு மேல் சாதிக்க முடியாத கரணம் ஆகும்.மும்பையில் ஏற்கனேவே தொழில் மற்றும் வர்த்தக நிறுவன ங்களால் நிலத்தின் விலை ஏறிப்போயிருந்ததும் ஒரு கரணம்.(தொடரும்)

Comments

Popular posts from this blog

19.அரசு மது பானக் கூடங்கள்-1

1.வணக்கம்

13.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-2