16.கவிஞர் கமல்

கமல் இந்த கவிஞரும் என்று சொன்னதை சில எழுத்தாளர்கள் விமர்சித்திருக்கிறார்கள் .என்னதான் கமல் கோடிக்கணக்கில் ஊதியம் வாங்கும் நடிகராக இருந்தாலும் தன்னை ஒரு கவிஞராக கூறி பெருமைப்படுவது ஒட்டுமொத்த கவிஞர்களுக்கும் பெருமை. கவிஞர்களிலேயே பலர் சரியான ஊதியம் இல்லை என்று புலம்பி க்கொண்டிருக்கும் போது கமல் தன்னை கவிஞராக நினைத்து பெருமை கொள்வது கவிகள் தங்கள் செய்வது பெருமை வாய்ந்த தொழிலே என எண்ணி மகிழ்ச்சியடைய உதவும்.மேலும் இப்படி புலம்புபவர்கள் சோம்பேறிகள் என்பதே என் கருத்து.தமிழை வைத்து ஆட்சியைப் பிடித்தவர்கள்,திரைத்துறை எனும் தங்கசகதியில் மூழ்கித்திளைப்பைபவர்கள் இருக்கையில் இப்படி புலம்புபவர்கள் சோம்பேறிகளே .நானும் கமல் எழுதிய அல் அக்சா கோவில் பற்றிய கவிதையைப்படித்தேன் நன்றாக மற்றும் புரியும் படி இருந்தது.கவியாக கமலை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இல்லை.கமலை கவியாக ஏற்க மறுப்பவர்கள் அல் அக்சா பற்றிய கவிதையைப் படித்தபின் துவக்கநிலை கவியாகவாவது ஏற் றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Comments

Popular posts from this blog

19.அரசு மது பானக் கூடங்கள்-1

1.வணக்கம்

13.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-2