8.கர்நாடகாவுக்கு மகராசுடிரம் கொடுத்த பதிலடியில் தமிழ் நாட்டின் 2-ஆம் இடம் போனது -2

தமிழ்நாட்டை மகராசுடிரம் வீழ்த்த காரணம் மும்பையை வைத்து தகவல் தொழில் நுட்பத்தில் ஓரளவுக்கு மேல் சாதிக்க முடியாது என்பதை மகராசுடிரம் புரிந்து கொண்டதே.அதன் பின்னர் அவர்கள் புனேவை தேர்ந்தெடுத்தார்கள்.மும்பை இந்தியாவின் பொருளதார தலைநகரம், மகராசுடிராவின் தலைநகரம்,பங்குச்சந்தை நகரம் என நிறைத்து போயிருந்ததே ஓரளவுக்கு மேல் சாதிக்க முடியாத கரணம் ஆகும்.மும்பையில் ஏற்கனேவே தொழில் மற்றும் வர்த்தக நிறுவன ங்களால் நிலத்தின் விலை ஏறிப்போயிருந்ததும் ஒரு கரணம்.எனவே புனேவுக்கு முக்கியத்துவம் கொடு க் கத்தொடங்கினார்கள் . புனே தகவல் தொழில் நுட்ப நகராக வளர துவங்கிய பொது அடுத்த தகவல் தொழில் நுட்ப நகர் எது என் ற பட்டி மன் றம் தொடங்கியது.அப்பொழுதும் சென்னைக்கே வாய்ப்பு புனேவுக்கு வாய்ப்பு குறைவு.புனேயில் வெற்றி கதைகள் குறைவு சென்னையில் வெற்றி கதைகள் அதிகம் என் று சொன்னார்கள்.இத்தனைக்கும் புனே ஊர்திகள் உற்பத்தி துறையில் ஓரளவு வெற்றி பெற்ற நகரமாகும்.அதன் பின்னர் நடந்தது தான் விந்தை.புனே வல்லுனர்களின் கணிப்பை முறியடித்து. ,சென்னையை 3-ஆம் இடத்துக்கு தள்ளி 2-ஆம் இடத்தை பிடித்தது தமிழ் நாடும் 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. http://indianexpress.com/article/cities/pune/pune-only-behind-bangalore-in-software-exports-in-india/ புனேவின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியானது கர்நாடகாவின் தகவல் தொழில் நுட்ப ஆதிக்கத்துக்கு மகராசுடிரம் கொடுத்த பதிலடி என் று சொன்னார்கள்.ஆனால் இந்த பதிலடியில் தமிழ் நாட்டின் 2-ஆம் இடம் போனதுதான் சோகம்.

Comments

Popular posts from this blog

19.அரசு மது பானக் கூடங்கள்-1

1.வணக்கம்

13.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-2