24.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-3

இந்த சுதந்திர நாள் விழாவின் பொது விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி அல்லது வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூரை தனியாகப் பிரித்து அறிவிப்பு வெளியிட முதல்வர் பழனிசாமி திட்டமிட்டிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.இரண்டு மாவட்ட்ங்களுமே நெடுநாளைய கோரிக்கையாகும் .வேலூர் ,விழுப்புரம் இரண்டுமே தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் ஆகும் .வேலூரின் பரப்பளவு 6077 சதுர கி.மீ ,மக்கள் தொகை 3936000(2011-ல் ), விழுப்புரத்தின் பரப்பளவு 7217 சதுர கி.மீ ,மக்கள் தொகை 3459000(2011-ல் ).தமிழ் நாட்டின் மிக சிறிய மாவட்ட்ங்களான சென்னை,கன்னியாகுமாரி ஆகியவற்றின் பரப்பளவு முறையே 178சதுர கி.மீ ,1672 சதுர கி.மீ.அப்படிப் பார்த்தல் கன்னியாகுமரியை விட வேலூர் 4 மடங்கும்,விழுப்புரம் 5 மடங்கும் பெரியவை.சிறிய மாவட்டம் என்று அழைக்கப்படும் கன்னியாகுமரியில் கூட களியாக்கவிளையிலிருந்து தலைநகர் நாகர்கோவிலை அடைய ஒன்றரை மணி நேரம் ஆகிறது.அப்படி பார்த்தால் கன்னியாகுமரியை விட 4,5 மடங்கு பெரிய மாவட்டங்களின் தலை நகரையடைய எவ்வளவு மணிநேரம் ஆகும்,அதனால் மக்கள் அடைய நேரும் துன்பங்கள் என்னவெல்லாம் என்று நினைத்துப்பாருங்கள்.விழுப்புரம் மாவட்டத்தின் சில இடங்களில் இருந்து தலைநகர் விழுப்புரத்தை அடைய 21/2 மணி நேரம் ஆகிறது என்றும் படித்திருக்கிறேன். மக்கள் தொகை : வேலூர் மற்றும் விழுப்புரத்தின் மக்கள்தொகை முறையே 39 லட்சம்,34 லட்சம்.குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களான பெரம்பலூர் ,அரியலூர்,நீலகிரி மாவட்ட்ங்களின் மக்கள் தொகை முறையே 5.7 லட்சம்,7.5 லட்சம்,7.35 லட்சம் மட்டுமே.இத அளவு குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களிலேயே ஆட்சியர் அலுவலகம்,தாலுகா அலுவலகம்,வேலைவாய்ப்பு அலுவலகம் போன்றவற்றில் எவ்வளவு கூட்டம் இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் .அப்படி இருக்கும் போது இவற்றை விட 5,6 மடங்கு மக்கள் தொகை கொண்ட வேலூர்(39 லட்சம்), விழுப்புரம்(34 லட்சம்) மாவட்டங்களில் எவ்வளவு கூட்டமும் காத்திறுப்புக்கும் மக்கள் ஆளாக வேண்டி வரும் என்று நினைத்து பாருங்கள் .எனவே தான் வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்கிறேன்.மேலும் வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைப் பிரித்தாலும் அவைமுறையே 17,18 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக இருக்கும் .பிரிக்கப் பட்ட பிறகும் இந்த மாவட்ட்ங்களை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட 10 மாவட்டங்களாவது இருக்கும் .

Comments

Popular posts from this blog

19.அரசு மது பானக் கூடங்கள்-1

1.வணக்கம்

13.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-2