22.அரசு மது பானக் கூடங்கள்-2(படகு துறை)
2-3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசின் படகு துறை 48 படகு நிலையங்களின் மூலம் ஆண்டுக்கு 11 கோடி வருமானம் வருவதாக செய்தி வெளியிட்டிருந்தது.தமிழ் நாட்டில் உள்ள நீர் நிலைகளின் எண்ணிக்கை 1000 கிலோ மீற்றர் நீள கடற்கரை ஆகியவற்றை ஒப்பிடும் போது 48 படகு துறை என்பது மிகக்குறைவே ஆகும்.இந்த படகு துறைகளின் எண்ணிக்கையை ஆண்டு தோறும் இருமடங்காக்கினாலே 10 ஆண்டுகளில் சுமார் 50000 ஆயிரம் படகு துறைகளுடன் 11000 கோடி வருமானம் கொடுப்பனவாகவும் மாறிவிடும்.மேலும் இந்த இடங்களில் போக்குவரத்து வசதி,தாங்கும் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து மறைமுகமாக பல வேலைவாய்ப்புகள் மற்றும் வருவாயை அரசுக்கு கொடுக்கும்.கன்னியாகுமரியில் மக்கள் வருவது விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கோ ,திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கோ அல்ல.கடற்கரை ,படகு சவாரி,அதையொட்டி உள்ள பொழுதுப்போக்கு மையங்கள் போன்றவற்றை காண்பதற்கே.ஓணம் பண்டிகையின் போது கன்னியாகுமரியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 14000 லிருந்து 21000 ஆயிரமாக உயர்ந்து விடுகிறது.மலையாளிகள் வருவது விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கோ ,திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கோ அல்ல,சுற்றுலா மற்றும் பொழுது போக்கிற்காகவே.எனவே படகு துறைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் குறைந்தது 11000 கோடி வருவாயைக் காணமுடியும்.
Comments
Post a Comment