18.மெட்ரோ ரயில் திட்டங்கள் -1
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை போக்குவரத்து உள்கட்டமைப்பே ஆகும்.இன்றைக்கு வளர்ந்த நாடுகள் என் வளர்த்த நடுகள் ஏன் வளர்ந்த நாடுகளாக இருக்கின்றன என்று பார்த்தால் அவை கொண்டிருக்கும் சாலைகள் மெட்ரோ ரயில் திட்ட்ங்கள்,வானுர்தி நிலையங்களே காரணங்கள் ஆகும்.உதாரணத்துக்கு ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை விமான நிலையம் 1.8 கோடி பயணிகளை கையாள்கிறது.ஆனால் யூரோப்பாவிலுள்ள 10-20 லட்ச்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களே 4-5 கோடி பயணிகளை கையாள்கிறது.யூரோப்பா ,அமெரிக்காவை பின்பற்றும் சென்னையை விட 5 மடங்கு குறைவாக 20 லட்ச்சம் மக்கள் தொகை கொண்ட துபாய் கூட சுமார் 7.5 கோடி பயணிகளை கையாள்கிறது.கோவை அளவுக்கு மக்கள் தொகை கொண்ட துபாயில் 10 ஆண்டுகளுக்கு முன்பே மெட்ரோ ரயில் வந்துவிட்ட்து.கோவையில் 10 ஆண்டுகளாக மெட்ரோ /மோனோ ரயில் திட்டங்கள் அறிவிப்பு நிலையிலேயே நிற்கிறது.கடைசியாக மத்திய அமைச்சர் ஒருவர் கோவையில் மெட்ரோ ரயில் தொடங்குவது முடியவே முடியாத காரணம் என்று கூறியதோடு மட்டுமில்லாமல் யூரோப்பாவில் 5 லட்ச்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கூட மெட்ரோ ரயில் செயல் படுகிறது என்று கூறியிருப்பது நகைப்புக்குரியது .அதையும் தண்டி முதல்வர் பழனிசாமி அறிவித்த போதும் கோவைக்காரர்கள் மெட்ரோ ரயில் வரவே வராது என்று அடித்து கூறியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.உண்மையில் மெட்ரோ ரயில் வரவேண்டும் என்பதே அவர்கள் விருப்பம் ஆகும் .ஆனால் பல்லாண்டுகளாக ஏமாத்தப்படட வெறுப்பின் வெளிப்பாடே அது.மத்திய அமைச்சர் கருத்துக்கு பிறகும் கோவை மெட்ரோ ரயில் திடடத்தை அறிவித்ததனால் தான் நன் முதல் அமைச்சர் பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தேன் .அதற்குள் பழனிச்சாமி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டு கோவை மெட்ரோ ரயில் திட்டம் அம்போ ஆகியுள்ளது.இருந்தாலும் கோவையின் அசுர தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி.அருகிலுள்ள கோவையை விட சிறிய நகரமான கொச்சியில் மெட்ரோ ரயில் வந்திருப்பதனால் கோவைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் போன்றவை கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவரும் என்று நம்புகிறேன் .தமிழ் நாட்டில் மெட்ரோ ரயில் திடடத்துக்கு தகுதியான நாகர்கள் எவையென அடுத்த பதிவில் பார்ப்போம்.
Comments
Post a Comment