25.கொஞ்சம் அரசியல்

ஒரு ஆந்திர விடுதி நண்பர் பலமுறை தமிழர்கள் அரசியல் பற்றி பேசுவார்கள் இல்லை திரைப்படம் பற்றி பேசுவார்கள் என்று சொன்னார்.எனக்கும் வளர்ச்சி,நிர்வாகம் பற்றி பேசி களைப்பாகிவிட்டது.கொஞ்சம் அரசியல் பேசலாம். ஸ்டாலின் உலக வரலாற்றிலேயே அதிகம் காலம் காத்திருப்பவர் என்று சொல்லி தமிழ் நாட்டில் சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள் எல்லாம் கவலைப்படுவது வியப்பாக உள்ளது.2001-06 சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்த துரைமுருகன் இப்பொழுதும் எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருப்பது பற்றியோ,அப்பொழுது எந்த பதவியும் இல்லாமல் வெறும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருப்பது பற்றியோ யாரும் கவலைப் படுவதில்லை.2001-06 சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த அன்பழகனுக்கு முதல்வர் பதவி வழங்கப்படாமல் கருணாநிதிக்கு வழங்கப் பட்டது பற்றியோ ,அவருக்கு துணை முதல்வர் கூட பதவி வழங்கப்படாமல் அவர் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கீழே பணிபுரிந்த்தது பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை .ஆனால் ஸ்டாலின் எதோ முதல்வர் பதவிக்காகவே பிறந்ததுபோல் அறியாமைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.இதில் படித்தவர்கள் ,அறிஞ்ர்கள் எண்ணிக்கை பாமரர்கள் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பது பெருங்கூத்து . ஸ்டாலினின் பிரச்சனை அவர் கருணாநிதிக்கு பிறகு முதல்வர் மற்றும் தலைவர் பதவி தானாகவே தேடி வரும் என்று நினைத்திருந்ததே காரணம்.

Comments

Popular posts from this blog

19.அரசு மது பானக் கூடங்கள்-1

1.வணக்கம்

13.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-2