19.அரசு மது பானக் கூடங்கள்-1
தமிழக அரசு மது பானக் கூடங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையால் வருவாயை இழந்து திணறி வருவது அனைவருக்கும் தெரியும் .எதோ இந்த மது பானக் கூடங்கள் மூலம் வரும் வருவாய் தமிழ்நாடு பிறந்ததிலிருந்து வருவது போல் எல்லாரும் நினைத்து இருக்கிறார்கள்.ஆனால் 2001 ல் செயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னரே தனியார் வசம் இருந்த மது பானக் கடைகள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் ஏமாத்தப் பட்டு கடை முதலாளிகளுக்கு செல்வதைக்கண்டு மது பானக் கூடங்களை அரசுடைமையாக்கினார் .அதன் பின்னர் ஆண்டுதோறும் மதுபானக் கடைகள் விற்பனையில் கண்ட வளர்ச்சி வரலாறு.தமிழ் நாட்டில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனகளை விட வளர்ச்சி அதிகம் இருந்தது என்றாலும்.எதோ ஒட்டுமொத்த தமிழ் நாடும் இந்த மது பானக்கூடங்களை நம்பித்தான் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப் பட்டது.தமிழக அரசின் 1 லட்ச்சம் கோடி வரவு செலவு அறிக்கையில் இந்த சுமார் 30 ஆயிரம் கோடி மதுபான விற்பனையில் மதுபான நிறுவனகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை கடை வாடகை ஊழியர்களின் ஊதியம் போக சுமார் 10000 கோடியே அரசுக்கு வருவாயாக வந்திருக்கும்.இது வரவு செலவு அறிவிப்பில் வெறும் பத்து விழுக்காடு மட்டுமே மீதி 90 விழுக்காடு வேறுதுறைகளில் இருந்து மட்டுமே வருகிறது .தமிழ்நாடு அரசு சரியாக கவனிக்காத வேறு ஒரு துறை சுற்றுலாத் துறை-தொடரும்
Comments
Post a Comment