26.அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு
அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு அறிவிப்பு வந்துள்ளது.இடைநிலை ஆசிரியர்களின் சம்பளம் 40000 லிருந்து 50000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அரசு பள்ளிகள் தரம் கெட்டவை என்று சொல்லி நா டிச்ச செல்லும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியும் வெறும் 5-8 ஆயிரங்களே.இத்தனைக்கும் அரசு பணியிடங்கள் பெருமளவில் காலியாக உள்ளன.அவை பெருமளவில் நிரப்பப் படாமல் உள்ளன.நம் நாட்டில் மக்கள் தொகையே அரசு அலுவலகங்கள்,பேருந்துகளில் கூட்டம அதிகமாக இருப்பதற்கு கரணம் என்று கூறப்படடாலும் அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை குறைவு,பேருந்துகள் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கப் படமாய் போன்றவையே பிரச்சனைகளுக்கு காரணமாகும்.தமிழ்நாட்டை விட 2 கோடி மக்கள் தொகை குறைவான இங்கிலாந்தில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 60 லட்ச்சம்,தமிழ் நாட்டின் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 12 லட்ச்சம் மட்டுமே.அரசு ஊளியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அரசு பணிகள் எவ்வளவு தாமதமாக நடைபெறும் ,பொது மக்கள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை அறிகிறீர்களா?இத்தனைக்கும் 1991 லிருந்தே அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 12 லட்ச்சமாக இருந்து வருகிறது.1991 ல் 5.6 கோடியாக இருந்த மக்கள் தொகை 2011 ல் 7.2 கோடியாக உயர்ந்துவிட்டது.2017 நிலவரப்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 40 விழுக்காடு உயர்ந்துள்ளது .அப்படிப்பார்த்தால் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு உயர்ந்து 17 லட்ச்சமாக இருக்க வேண்டும்.ஆனால் இப்பொழுது வரை 12 லட்ச்சமாக இதுவரை இதுவரை நிரப்ப வேண்டிய பணியிடங்கள் நிரப்பப் படாமலும் உள்ளது.இனி அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு அரசு ஊழியர்களுக்கு
ஆண்டுக்கு 10 விழுக்காடு உதிய உயர்வு அளிப்பதே சிறந்தது.காவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே குற்ற செயல்கள் அதிகமாக நடைபெறக் காரணமாகும் .எனவே காவல் துறையில் பணியிடங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் .எல்லாவற்றயும் விட முக்கியமானது ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 12 லட்ச்சம்.ஓய்வு ஊதியர்களின் எண்ணிக்கை 7 லட்ச்சம் .இப்போது உள்ள அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் உண்டா இல்லையா தெரியவில்லை.அப்படி இருப்பதாக இருந்தால் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப் படவேண்டும்.தமிழ்நாட்டின் சராசரி வயதே 65 ஐ தாண்டிவிட்டது.இதன் மூலம் ஓய்வு ஊதிய செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.
Comments
Post a Comment