Posts

27.ஊதிய உயர்வு பற்றிய செய்தி மற்றும் கருத்துகள்

சிறந்த கருத்து -1 சம்பளத்தை உயர்த்துவதற்கு பதிலாக வேலை வாய்ப்பை அதிகரித்து இருக்கலாம். அரசாங்க வேலைகள் இன்னும் சீக்கிரமாகவும் சிறப்பவும் முடியும். ஒரு அறுபது ஆயிரத்தை இரண்டு முப்பது ஆயிரமா பிரிச்சி கொடுத்து இருந்தா ரெண்டு குடும்பம் பிழைக்கும். சிறந்த கருத்து -2 பொருளாதார அறிவே இல்லாதவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான். இந்த சம்பள உயர்வு இனிமேல் மாற்றவே முடியாது. மக்களுக்கு தேவையானவற்றை எந்த பணத்தில் இருந்து செய்வார்கள். அரசு ஊழியர்களின் ஓட்டு முழுமையாக கிடைத்து விடும் என்று செய்தார்களோ? சிறந்த கருத்து -3 தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே தத்தளிக்கிறது. எப்படி அவர்கள் சம்பள உயர்வு அளிக்க முடியும். அந்த ஊழியர்கள் எப்படி விலைவாசியை எதிர்கொள்ள முடியும்? தமிழ் நாட்டு விவசாயிகள் டெல்லி போராட்டம் செய்தது அப்போது முதல்வர்க்கு கண்ணு தொியாலா. அரசு பள்ளி மாணவா/ மாணவிகள் போராட்டம் செய்தது கண்ணுக்கு தெரியாலா. நீட் எதிராக போராட்டம் அதுவும் தெரியாது.ஆனால் அரசு ஊழியர்கள் போராட்டத்தற்க்கு உடனடியாக தீர்வு என்ன கோடுமை இது. 1. டெல்லியில் வரை போராட்டம் நடத்தியாவா்கள் விவசாயிகள் நாங்கள் என்ன பைத

26.அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு

அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு அறிவிப்பு வந்துள்ளது.இடைநிலை ஆசிரியர்களின் சம்பளம் 40000 லிருந்து 50000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அரசு பள்ளிகள் தரம் கெட்டவை என்று சொல்லி நா டிச்ச செல்லும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஊதியும் வெறும் 5-8 ஆயிரங்களே.இத்தனைக்கும் அரசு பணியிடங்கள் பெருமளவில் காலியாக உள்ளன.அவை பெருமளவில் நிரப்பப் படாமல் உள்ளன.நம் நாட்டில் மக்கள் தொகையே அரசு அலுவலகங்கள்,பேருந்துகளில் கூட்டம அதிகமாக இருப்பதற்கு கரணம் என்று கூறப்படடாலும் அரசு அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை குறைவு,பேருந்துகள் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப அதிகரிக்கப் படமாய் போன்றவையே பிரச்சனைகளுக்கு காரணமாகும்.தமிழ்நாட்டை விட 2 கோடி மக்கள் தொகை குறைவான இங்கிலாந்தில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 60 லட்ச்சம்,தமிழ் நாட்டின் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 12 லட்ச்சம் மட்டுமே.அரசு ஊளியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அரசு பணிகள் எவ்வளவு தாமதமாக நடைபெறும் ,பொது மக்கள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை அறிகிறீர்களா?இத்தனைக்கும் 1991 லிருந்தே அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 12 லட்ச்சமாக இருந்து வருகிறது.1

25.கொஞ்சம் அரசியல்

ஒரு ஆந்திர விடுதி நண்பர் பலமுறை தமிழர்கள் அரசியல் பற்றி பேசுவார்கள் இல்லை திரைப்படம் பற்றி பேசுவார்கள் என்று சொன்னார்.எனக்கும் வளர்ச்சி,நிர்வாகம் பற்றி பேசி களைப்பாகிவிட்டது.கொஞ்சம் அரசியல் பேசலாம். ஸ்டாலின் உலக வரலாற்றிலேயே அதிகம் காலம் காத்திருப்பவர் என்று சொல்லி தமிழ் நாட்டில் சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள் எல்லாம் கவலைப்படுவது வியப்பாக உள்ளது.2001-06 சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்த துரைமுருகன் இப்பொழுதும் எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருப்பது பற்றியோ,அப்பொழுது எந்த பதவியும் இல்லாமல் வெறும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருப்பது பற்றியோ யாரும் கவலைப் படுவதில்லை.2001-06 சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த அன்பழகனுக்கு முதல்வர் பதவி வழங்கப்படாமல் கருணாநிதிக்கு வழங்கப் பட்டது பற்றியோ ,அவருக்கு துணை முதல்வர் கூட பதவி வழங்கப்படாமல் அவர் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கீழே பணிபுரிந்த்தது பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை .ஆனால் ஸ்டாலின் எதோ முதல்வர் பதவிக்காகவே பிறந்ததுபோல் அறியாமைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.இதில் படித்தவர்கள் ,அறிஞ்ர்கள் எண்ண

24.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-3

இந்த சுதந்திர நாள் விழாவின் பொது விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி அல்லது வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூரை தனியாகப் பிரித்து அறிவிப்பு வெளியிட முதல்வர் பழனிசாமி திட்டமிட்டிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.இரண்டு மாவட்ட்ங்களுமே நெடுநாளைய கோரிக்கையாகும் .வேலூர் ,விழுப்புரம் இரண்டுமே தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் ஆகும் .வேலூரின் பரப்பளவு 6077 சதுர கி.மீ ,மக்கள் தொகை 3936000(2011-ல் ), விழுப்புரத்தின் பரப்பளவு 7217 சதுர கி.மீ ,மக்கள் தொகை 3459000(2011-ல் ).தமிழ் நாட்டின் மிக சிறிய மாவட்ட்ங்களான சென்னை,கன்னியாகுமாரி ஆகியவற்றின் பரப்பளவு முறையே 178சதுர கி.மீ ,1672 சதுர கி.மீ.அப்படிப் பார்த்தல் கன்னியாகுமரியை விட வேலூர் 4 மடங்கும்,விழுப்புரம் 5 மடங்கும் பெரியவை.சிறிய மாவட்டம் என்று அழைக்கப்படும் கன்னியாகுமரியில் கூட களியாக்கவிளையிலிருந்து தலைநகர் நாகர்கோவிலை அடைய ஒன்றரை மணி நேரம் ஆகிறது.அப்படி பார்த்தால் கன்னியாகுமரியை விட 4,5 மடங்கு பெரிய மாவட்டங்களின் தலை நகரையடைய எவ்வளவு மணிநேரம் ஆகும்,அதனால் மக்கள் அடைய நேரும் துன்பங்கள் என்னவெல்லாம் என்று நினைத்து

23.வட கொரியா

நமக்கு தான் வெட்ட ,வெட்ட எதிரிகள் முளைத்து வருகிறார்கள் என்று பார்த்தால் வல்லரசு அமெரிக்காவுக்கே சதாம் ,ஒசாமா ,தாலிபானைகளை முடித்து விட்டு வரும் முன்னே வட கொரியா என்று ஒரு வம்பன் எதிரி முளைத்து வந்திருக்கிறான் ,முதலில் தென் கொரியா ,ஜப்பான் நாடுகளுக்கு மட்டுமே ஆபத்தாக பார்க்கப்பட்ட வட கொரியாவின் ஏவுகணை வரம்புகள் இன்று அமெரிக்கா வரை நீண்டு உலக வல்லரசு அமெரிக்காவுக்கே பெருந்தலைவலியாக மாறியிருக்கிறது.சுண்டக்காய் வட கொரியாவின் அலம்பல்கள் ரசியாவை இரண்டாம் உலக காலத்து பழைய கதைத்தலைவர்களான ஜெர்மனி,இங்கிலாந்து ,பிரான்ஸ் நிலைமைக்கு தள்ளியிருக்கிறது.வெகு விரைவில் ரசியாவும் பனிப்போர் காலத்து பழைய கதைத்தலைவன் என்று அழைக்கப்படடால் வியப்பில்லை .வருங்கால வல்லரசு என்று மார்தட்டிக்கொண்ட சீனாவும் அமெரிக்கா -வடகொரியா என்று கதை மாறிக்கொண்டதால் பல்கலைக் கடித்துக்கொண்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.எப்படியோ நமக்கு மட்டுமல்ல வலிமை வாய்ந்த அமெரிக்காவுக்கே பிரச்சனைகள் இருக்கின்றன என்று நிம்மதிப் பட்டுக்கொள்ளலாம்.

22.அரசு மது பானக் கூடங்கள்-2(படகு துறை)

2-3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசின் படகு துறை 48 படகு நிலையங்களின் மூலம் ஆண்டுக்கு 11 கோடி வருமானம் வருவதாக செய்தி வெளியிட்டிருந்தது.தமிழ் நாட்டில் உள்ள நீர் நிலைகளின் எண்ணிக்கை 1000 கிலோ மீற்றர் நீள கடற்கரை ஆகியவற்றை ஒப்பிடும் போது 48 படகு துறை என்பது மிகக்குறைவே ஆகும்.இந்த படகு துறைகளின் எண்ணிக்கையை ஆண்டு தோறும் இருமடங்காக்கினாலே 10 ஆண்டுகளில் சுமார் 50000 ஆயிரம் படகு துறைகளுடன் 11000 கோடி வருமானம் கொடுப்பனவாகவும் மாறிவிடும்.மேலும் இந்த இடங்களில் போக்குவரத்து வசதி,தாங்கும் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து மறைமுகமாக பல வேலைவாய்ப்புகள் மற்றும் வருவாயை அரசுக்கு கொடுக்கும்.கன்னியாகுமரியில் மக்கள் வருவது விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கோ ,திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கோ அல்ல.கடற்கரை ,படகு சவாரி,அதையொட்டி உள்ள பொழுதுப்போக்கு மையங்கள் போன்றவற்றை காண்பதற்கே.ஓணம் பண்டிகையின் போது கன்னியாகுமரியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 14000 லிருந்து 21000 ஆயிரமாக உயர்ந்து விடுகிறது.மலையாளிகள் வருவது விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கோ ,திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கோ அல்ல,சுற்றுலா மற்றும் பொழுது போக்கிற

21.மெட்ரோ ரயில்-2

மத்திய அரசின் அறிவிப்புப்படி 10 லட்ச்சம் மக்கள் தொகைக்கு மேல் கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திடடடத்தை அறிவிக்க முடியும் .அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் சென்னை ,மதுரை ,கோவை ,திருச்சி ,சேலம் ,திருப்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை யை அறிமுகப்படுத்த முடியும் .ஏற்கனேவே சென்னையில் மெட்ரோ ரயில்,புறநகர் ரயில் ஆகியவை உள்ளது .கோவை,மதுரை,திருச்சி ஆகிய நகர்களில் மோனோ ரயில் திட் டம் செயலலிதாவால் அறிவிக்கப்பட்டும் செயல் படுத்தப்படவில்லை.ஸ்டாலின் திருச்சியில் மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்தலின் பொது சொன்னார்.ஆனால் திமுக வெற்றி பெறமுடியவில்லை அதிமுக ஆட்சிக்கு வந்த பொது கோவைக்கு மட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆனால் இப்போது ஆட்சியே இழுபறியாகிவிட்டது.என்னதான் கோவை அதிமுக கோடடையாக இருந்தாலும் .திமுக ஆட்சி காலத்தில் தான் கோவையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கொண்டுவரப்பட்டது.அது போல மெட்ரோ ரயிலும் திமுக ஆட்சியில் தன கொண்டு வரப்படுமோ என்னவோ?